கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்: ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

Ampara Batticaloa Trincomalee Dengue Prevalence in Sri Lanka Eastern Province
By Independent Writer May 10, 2023 10:50 PM GMT
Report

அரசாங்க குடியிருப்புகளில் உள்ள சில அதிகாரிகள் எவ்வித அக்கறையும் கொண்டிராததால் அவை டெங்கு நுளம்பு அதிகரிக்கும் இடங்களாக மாற்றமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தெரிவித்துள்ளார்.

மாகாண டெங்கு கட்டுப்பாட்டு செயலணியினருடன் திருகோணமலை ஆளுனர் செயலகத்தில் நேற்று (10.05.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறு டெங்கு பரவல் குறித்து அக்கறையற்று இருக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச குடியிருப்பு தொகுதிகளை இலக்கு வைத்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் (16.05.2023) ஆம் திகதியை விசேட "மாகாண டெங்கு ஒழிப்பு தினமாக" பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்: ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை | Dengue Threat For Eastern Province Governor Action

ஒருநாள் சிரமதானம்

அதன்படி, அனைத்து அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஒரு நாள் சிரமதானத்தினை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களை அறிவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை விரைவாக அமைத்து நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரனுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 1289 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்தா இந்தக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்: ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை | Dengue Threat For Eastern Province Governor Action

அதிகரிக்கும் தொற்றாளர்கள்

மேலும் அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வருடத்தில் இதுவரை 1368 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1250 டெங்கு நோயாளர்களும் அம்பாறை மாவட்டத்தில் 77 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கது.  

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US