யாழ். மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் நோய் பரம்பல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (04.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் பரவல் தீவிரமாக காணப்படுவதோடு ஒவ்வொரு நாளும் சராசரியாக 70 தொடக்கம் 100 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.
டெங்கு கண்காணிப்பு பணிகள்
கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் டெங்கு நோயின் பரவல் தீவிரமாக உள்ளது.
தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க முடிகிறது.
மேலும், கடந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த வருடத்தில் முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இதனால், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் திணைக்களம், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் முப்படையுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று டெங்கு கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
டெங்கு இறப்புகள்
கடந்த 02ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் அதனை சூழவுள்ள வீடுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், பரீட்சை மண்டபங்களாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலும் டெங்கு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு புகையூட்டல் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் டெங்கு இறப்புகளை பார்ப்போமேயானால், காலம் தாழ்த்தி வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்களே இறப்பினை சந்தித்துள்ளனர்.
எனவே, எதிர்காலத்தில் டெங்கு அறிகுறி காணப்படும் நோயாளர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலை நாடுவதன் மூலம் தங்களை டெங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
