யாழ். வட்டுக்கோட்டையில் டெங்கு பரவும் அபாயம்: பாராமுகமாக செயற்படும் அதிகாரிகள் (Photos)
வட்டுக்கோட்டையில் டெங்கு பரவும் அபாயம் காணப்படும் போதிலும் சுகாதார தரப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையினர் பாரா முகமாக செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை - அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியோரத்தில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது.
குறித்த இடத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் என பல பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதோடு சூழலுக்கு தீங்கான மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.
தனியார் கல்வி நிலையம்
இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் சூழல் மாசடைவதுடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் காணப்படுகிறது.
இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு
அருகாமையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளதால் இந்த
பகுதியில் உருவாகும் நுளம்பானது மாணவர்களை கடிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
மக்கள் மத்தியில் விசனம்
அத்துடன், சுகாதார தரப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையினர் அன்றாடம் இந்த வீதியால் பயணிக்கும் போதிலும் இவற்றினை கவனிப்பதாக தெரியவில்லை.
வீடுகளிலும் வேறு இடங்களிலும் சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறு கூறி, டெங்கு அபாயம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் உத்தியோகத்தர்கள் இவற்றினை கண்டும் காணாதது போல் செல்வது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று மரணங்கள் டெங்கு தொற்றினால் சம்பவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
