கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை
புறக்கோட்டை - செட்டியார் தெருவில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கும் மூன்று பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட மூன்று தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயணம் செல்லும் போர்வையில் எம்பிலிப்பிட்டியவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை பல்லே பெத்த பிரதேசத்திற்கு அழைத்து சென்று சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை கொள்ளையடித்துள்ளனர்.
நகைக்கள் திருட்டு
அந்த முச்சக்கர வண்டியை பயன்படுத்தி கொழும்பு, கம்பஹா, களுத்துறை வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் வீதிகளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கம்பஹா பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க நகையை சந்தேகநபர்கள் ஹெட்டி வீதிக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன் போது சந்தேகநபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் நகைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
