எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை அதிக அபாயகரமான சூழ்நிலை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16.07.2026) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam