புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை
புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவாகும் பிரதான புற்றுநோய் வகைகளுள் வாய் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளதால், புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது குறித்து அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், இந்நாட்டு மக்கள் வாய் புற்றுநோய்க்கு ஆளாவதற்கு புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு மற்றும் பல்வேறு மெல்லும் புகையிலை தயாரிப்புகளைப் பயன்படுத்துவதே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள சட்டத்தின்படி வெற்றிலை பாக்கில் புகையிலை உள்ளடக்கப்பட முடியாது எனவும், புகையிலை கலந்த வெற்றிலை பாக்குகளை விற்பனை செய்வது, விநியோகிப்பது, கைவசம் வைத்திருப்பது, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது முற்றிலும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு, இலங்கை முழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் தொடர்ச்சியான சோதனைகளையும் சுற்றிவளைப்புகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, புற்றுநோய் அபாயத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக பொதுமக்களும், சட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் இந்த விடயம் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan