மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - மக்களுக்கு அவசர அறிவிப்பு

Mannar Dengue Prevalence in Sri Lanka
By Ashik Jul 04, 2026 05:01 PM GMT
Report

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (04.07.2026) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47ஆக காணப்படுகிறது. பாடசாலைகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் காணி நிலங்கள் போன்ற 50க்கும் அதிகமான இடங்களில் டெங்கு பெருக்கத்திற்கான புழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவு: தெஹ்ரானில் 4 நாட்கள் பொது முடக்கம்

ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவு: தெஹ்ரானில் 4 நாட்கள் பொது முடக்கம்

சுத்தம் செய்தல்

இதனை கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறச் சூழலையும், வீட்டின் உள்ளே நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை (Fridge) அடிக்கடி கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். வீதியோரங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் பொது மக்கள் கழிவுகளையோ குப்பைகளையோ கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கை விடப்பட்டு கிடக்கும் காணி நிலங்களை சுத்தப்படுத்துவதற்கு உரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால், குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயுடையவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவரை நாட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - மக்களுக்கு அவசர அறிவிப்பு | Dengue Fever In Sri Lanka

காய்ச்சல் குறையாத பட்சத்தில், இரண்டு நாட்களில் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று Full Blood Count (FBC) மற்றும் டெங்குவிற்கான NS1 பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். அரச மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தினமும் குறைந்தது அரை மணித்தியாலங்கள் (30 நிமிடங்கள்) தங்களது வளாகத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும்.

டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமான இடங்களை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கணிசமான அளவில் நுளம்பு பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பாடசாலை வளாகங்களில் வார அடிப்படையில் முழுமையாக பரிசோதிக்க வேண்டும் தொண்டு நிறுவனங்கள், முப்படையினர், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

வாகன சேவை மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்

வாகன சேவை மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்

குப்பைகள் அப்புறப்படுத்தல்

காணி மற்றும் பொது இடங்களில் நீர் தேங்க கூடிய வெற்றுப் பாத்திரங்கள், கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் பொது மக்கள் தங்களது வீட்டுச் சூழலை தினமும் அரை மணித்தியாலங்கள் சுத்திகரிக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை நீர் தேங்காத வண்ணம் முறையான வழிகளில் அழிக்க அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.

சமீபத்திய கள ஆய்வுகளின்படி 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக இருந்த பல வீடுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இடங்கள் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் பெருகுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெங்குவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள "சுய தூய்மையும், கூட்டுப் பொறுப்பு" மிக அவசியமானதாகும். இலங்கையின் வட மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - மக்களுக்கு அவசர அறிவிப்பு | Dengue Fever In Sri Lanka

முசலி மற்றும் மாந்தை மேற்கு ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் நகர் பகுதி 23 நோயாளர்களும், நானாட்டான் பகுதியில் கடந்த காலங்களில் அதிகமாக நோயாளர்கள் இருந்தபோதிலும், இந்த தடவை 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மடு பகுதியில் 6 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது! ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தல்

பொதுமக்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது! ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தல்

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US