நாட்டில் பலியாகும் பல உயிர்கள்! சுகாதார அமைச்சரை குற்றஞ்சாட்டும் சாணக்கியன்-செய்திகளின் தொகுப்பு
மக்களை காப்பாறி கொண்டிருக்கின்ற டெங்கு ஊழியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று டெங்கு நோயால் மக்கள் இறக்ககூடாது என டெங்கு ஊழியர்கள் மாவட்ட ரீதியாக செயற்படும் போது சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்.
இவர்கள் அரசாங்கம் இக்கட்டான நிலையில் முகம்கொடுத்த காலப்பகுதி மற்றும் கோவிட் காலப்பகுதியில் உயிரை பணயம் வைத்து இந்த நாட்டிலே மக்களின் பாதுகாப்புக்காக மிக குறைந்த சம்பளமான ஒரு நாளைக்கு 700 ரூபா சம்பளத்திற்கு கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நாட்டில் டெங்கு நோய் அதிகரித்துள்ள போது இவர்களது பணி இல்லாவிட்டால் எத்தனையோ பேர் மரணித்து இருப்பார்கள் என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,