யாழில் டெங்கு நோய் பரவல் குறைந்துள்ளதாக சுகாதார சேவை தரப்பில் தகவல்
யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து வருடங்களை விட இந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "இந்த ஆண்டு கடந்த ஐந்து வருடங்களை விடவும் மிக குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிக மோசமான டெங்கு நோய்த்தாக்கம் காணப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. எனினும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் டெங்கு நோய்த் தாக்கம் குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |