வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (Photos)
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர் வல்வெட்டித்துறை கடற்கரையோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றியதுடன் டெங்கு பெருகக்கூடிய இடங்களை இல்லாதொழித்துள்ளனர்.
குறித்த சிரமதானப் பணி இன்று (13.12.20230)காலை 8:00 மணியிலிருந்து 11மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
சிரமதானப் பணி
இதில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் தலைவர், செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள், பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஊரிக்காடு இராணுவத்தினர், வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி, மற்றும் வல்வை சிவகுரு வித்தியாலய ஆசியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
