சைபர் குற்றச் செயல்களை தடுக்க நாடு முழுவதிலும் விசேட பிரிவுகள்
இலங்கையில் இடம்பெற்று வரும் சைபர் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் விசேட பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
அதிகரித்துள்ள இணைய வழி குற்றச்சாட்டுக்கள்
இவ்வாறு விசேட பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக வடமேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் வாரியபொல பகுதியில் முதல் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்று முறைப்பாடு செய்யாது தங்களது மாகாணத்திலேயே முறைப்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பு செல்வதனை தவிர்த்து அந்தந்தப் பகுதிகளில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |