இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தை கடந்தது..!
மேற்கு மாகாணத்திற்கான சுகாதார சேவைகளின் பதில் பிரதி மாகாண பணிப்பாளர் நாயகமும், நிபுணருமான வைத்தியர் நவிந்த சொய்சாவின் கூற்றுப்படி, இலங்கையில் இந்த ஆண்டு பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று (28) நிலவரப்படி 100,000ஐ தாண்டியுள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தினசரி பதிவாகும் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டாலும், ஆபத்து முழுமையாகக் குறையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் அபாய நிலை நீடிப்பு
நாட்டின் ஏழு மாகாணங்கள் டெங்கு காய்ச்சல் உயர் அபாய நிலையில் நீடிப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வைத்தியர் நவிந்த சொய்சா மேலும் வலியுறுத்தியுள்ளார்.