யாழ். அச்சுவேலியில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் (Photos)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் அச்சுவேலியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (6.12.2023) அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மக்கள் விழிப்புணர்வு
இத் தெருவெளி நாடகம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் மக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது டெங்கு நோயை ஏற்படுத்தும் காரணிகள் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பான விபரங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டன.
அத்துடன் அச்சுவேலிப் பகுதியில் அதிகரித்துள்ள டெங்கு நோய் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தத் தெருவெளி ஆற்றுகை மூலம் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
