பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிவானந்தம் சிறிதரனை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளன.
குறித்த போராட்டமானது இன்று (19.04.2024) களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்கு முன்னால் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து, குறுகிய காலத்தில் வலயத்தை முன்னேற்றிய கல்விப் பணிப்பாளர் எமக்கு வேண்டும் போன்ற பல வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில் இடமாற்றம் செய்துள்ளமைக்கு
எதிர்ப்புத் தெரிவித்தும் மீண்டும் சி.சிறிதரனை பட்டிருப்பு வலயத்திற்கு
கல்விப் பணிப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண கல்விப்
பணிப்பாளர் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து நேற்று பழுகாமம் கண்டுமணி
மகாவித்தியலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 11 நிமிடங்கள் முன்

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
