வட மாகாணத்தில் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
புதிய இணைப்பு
தியாகத்தாய் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் வட மாகாணத்தின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கமைய, வவுனியாவில் (Vavuniya) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தமது பிள்ளைகளுக்கு நீதி கேட்டு 2616 ஆவது நாளாக வவுனியா, கண்டி வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன் போது, அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஒளி தீபம் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முதலாம் இணைப்பு
அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று (19.04.2024) நடைபெற்றது.
இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |