இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை கோரி, இத்தாலியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இத்தாலியின் மிலான் நகரில் மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் அங்கவீனமுற்றவர்களும் இருக்கின்றனர். இலங்கையில், பௌத்த, சைவ இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri