பொருட்களின் விலையேற்றத்திற்கும், பொருளாதார சீரழிவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பொருட்களின் விலையேற்றத்திற்கும், பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கத் தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்கப் பெற்ற ஆயுதங்களுக்குத் தமிழர்கள் பொறுப்பாளிகளா?, அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய், தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
