ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரி அம்பாறையில் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறையில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (14.02.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
இதேவேளை இன்றைய தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெறுகின்ற நிலையில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆசிரியர்கள் இன்று நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது அதனைக்கருத்தில் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam