சங்கு சின்னம் எங்கள் வசம்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பகிரங்க அறிவிப்பு

Jaffna Suresh Premachandran Tamil National Alliance General Election 2024 Parliament Election 2024
By Rakesh Oct 03, 2024 02:58 PM GMT
Report

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கு தேர்தல் ஆணையகத்தால் தற்போது சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாகச் சங்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேநேரத்தில் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகின்றோம் இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்த சுமந்திரன்

ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்த சுமந்திரன்

சங்கு சின்னம் எங்கள் வசம்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பகிரங்க அறிவிப்பு | Democratic Tamil Tessia Alliance Public Notice 

உள்ளூராட்சி சபை தேர்தல்

"ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கின்றது. இந்த கூட்டணியில் நாங்கள் உட்பட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இந்த கூட்டணியின் சின்னமாக குத்துவிளக்கு இருந்தது.

ஆனால், இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக்கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்தும் இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஓரணியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகின்றமையால் தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

சங்கு சின்னம் எங்கள் வசம்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பகிரங்க அறிவிப்பு | Democratic Tamil Tessia Alliance Public Notice 

தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தீர்மானம்

இதற்கமைய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்கு சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் நேற்று தேர்தல் ஆணையகத்தால் சங்கு சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கின்றோம். அதிலும் வடக்கு, கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகின்ற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்." என்றார்.

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விசேட வேலைத்திட்டம்

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விசேட வேலைத்திட்டம்

 

மொட்டுக்கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

மொட்டுக்கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US