தெமட்டகொடை அண்டன் ராஜின் உறவினர் துப்பாக்கியுடன் கைது
பாதாள உலகப் புள்ளிகளில் ஒருவரான உயிரிழந்த தெமட்டகொடை அண்டன் ராஜ் என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர்(40 வயது) ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து 45 வயதான வர்த்தகர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் பொரளை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பிலியந்தலையில் வைத்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் அதற்கான தோட்டாக்கள் 12உம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



