திட்டமிட்ட முடிவு தலைவலியாக மாறியது: தீர்மானத்தை கைவிட்டு மாற்று வழியை கையிலெடுத்த கோட்டாபய
புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கைவிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மட்டுமல்லாது ராஜாங்க அமைச்சர்கள் தமது உயர் அமைச்சு பதவிகளை வழங்குமாறு தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சில அமைச்சர்கள் மூன்றாவது தரப்பின் ஊடாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தலைவலியாக அதிகரித்ததால், ராஜபக்சவினர் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன் இதன் போது அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நிறுவனங்கள் தொடர்பாக மாத்திரம் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan