நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
குடிநீரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் குறித்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியாவசிய நடவடிக்கைகள்
வாகனங்களை கழுவுதல் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கோரியுள்ளது.

அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது, நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மலைப் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வறட்சியான மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், நீர் பிரச்சினை தொடர்பான விசாரணைகளுக்கு 1939 என்ற அழைப்பு மையத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செம்மணி குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! தகவலறிந்தவரை பின்தொடரும் புலனாய்வுப்பிரிவு
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri