36 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம் - இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்க மீண்டும் கோரிக்கை
தமது காணிகளை விடுவிக்கக்கோரி வலி. வடக்கு மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டமானது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
36 வருடங்களாக தீர்வு கிடைக்காத பிரச்சினை
இதற்கமைய, இன்றும் (01.11.2026) இடம்பெற்றுள்ளது.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில், தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம்(01) பலாலி சந்தி மற்றும் வாசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மயிலிட்டியிலும் மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri