கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷ்யா- சவூதி அரேபியா அறிவிப்பு

United States of America Saudi Arabia Crude Oil Prices Today World Russia
By Sheron Sep 06, 2023 08:36 PM GMT
Report

இந்த ஆண்டு இறுதியில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

சா்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெயின் விலையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷ்யா- சவூதி அரேபியா அறிவிப்பு | Demand For Crude Oil Saudi And Russia Notice

இது குறித்து சவூதி அரேபிய எரிசக்தித் துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் நிலைத்தன்மையையும், சமநிலையையும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) எடுத்து வருகிறது.

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்


அதன் ஒருபகுதியாக, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் 13 லட்சம் பேரலைக் குறைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்த பிறகும், கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்தை சவூதி அரேபிய அரசு உன்னிப்பாக கவனித்து வரும். அதன் அடிப்படையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடா்ந்து அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தவிா்ப்பதற்காக தனது கச்சா எண்ணெயை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது.

இதனால் சா்வதேச நிலையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்தது. இது, சவூதி அரேபிய உள்ளிட்ட அனைத்து எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஏற்றுமதி வருவாயையும் பாதித்தது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐ.நா கோரிக்கை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐ.நா கோரிக்கை


இந்த நிலையில், உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை உயர்த்த கடந்த ஆண்டே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும், சீனாவின் கச்சா எண்ணெய் தேவை மிகக் குறைவாக இருந்ததால் விலை உயரவில்லை.

இந்தச் சூழலில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கச்சா எண்ணெய் தினசரி உற்பத்தியைக் குறைக்கவிருப்பதாக ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் கூட்டாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கை

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியா, அந்த நாட்டின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவுடன் இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷ்யா- சவூதி அரேபியா அறிவிப்பு | Demand For Crude Oil Saudi And Russia Notice

இது, அமெரிக்க - சவூதி அரேபிய உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சவூதி அரேபியாவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தாா்.

எனினும், அதனையும் மீறி இந்த முடிவை சவூதி அரேபியா எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US