மட்டக்களப்பில் அப்பக்கடையில் அரசியல் நடத்துகிறார்களா..! பிரஜாசக்தி குழுவினர்
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியோரத்தில் அப்பக்கடை செய்து வரும் பெண்களின் கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறவில்லை என பிரஜாசக்தி குழுத் தலைவர் சு. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கூறுவது போன்று, தமது கிராமத்தின் பிரதான வீதியோரத்தில் அப்பம் விற்கும் கடைகள் அமைந்துள்ளன. அவர்களை நாம் எந்த காரணம் கொண்டும் எழும்புமாறு கூறவில்லை.
பிரஜாசக்தி குழுவினரின் கோரிக்கை
வீதியோரத்தில் இவ்வாறு சிறிய சிறிய அப்பக் கடைகள் உள்ளதால் வீதியில் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. அத்துடன், வீதி விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே, முதற்கட்டமாக அப்பம் விற்பனை செய்யும் கடை வைத்திருப்போர் சற்று ஓரமாக பின்தள்ளி தமது கடைகளை வையுங்கள் என நாம் அவர்களுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தோம்.
அதன் பின்னர் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் 150,000 பெறுமதியான நடமாடும் கடை அமைத்துத் தரப்படும், அதனை அவர்கள் கடற்கரை போன்ற வேறு இடங்களுக்கும் நகர்த்திச் சென்று வியாபாரம் மேற்கொள்லாம் எனத் தெரிவித்திருந்தோம்.
இதனைத் திரிபுபடுத்தி தவிசாளர் அரசியல் செய்கின்றார். எனவே, அரசியல் வங்குரோத்தை வைத்து விளையாடாமல் எமது பிரஜாசக்தியுடன் இணைந்து செயற்பட வாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.



கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan