இலங்கையில் டெல்டா திரிபு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள விடயம்
இலங்கையில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றுக்கு 95.8% டெல்டா கொவிட் திரிபே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியர் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட ஆய்வுக்குழு மேற்கொண்டிருந்தது.
அதன்படி, இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பதிவாகும் புதிய தொற்றுக்கு 100% டெல்டா திரிபே காரணமாகிறது என தெரியவந்துள்ளது.
மேலும், ஏனைய மாகாணங்களில் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு 84 முதல் 100% வரை டெல்டா திரிபுகளே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri