பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணய கலந்துரையாடல்(Photos)
தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எல்லை மீள் நிர்ணய முடிவு
இந்த கலந்துரையாடலானது, மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இன்று(28) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவட்ட எல்லை மறுசீரமைப்பு குழுவினால் தாயாரிக்கப்பட்ட அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டு, ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
மேலும் கலந்துரையாடலின் இறுதியில், இறுதியான அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில் சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், நிர்வாக கிராம அலுவலகர்கள், மாவட்ட செயலக பிரதேச செயலகங்களின் காணி தொடர்பான உத்தியோகத்தர்கள், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
