டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! முக்கிய குற்றவாளி வெளியிட்ட காணொளி..
டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பிற்கு காரணமானவர் என்று குறிப்பிடப்படும் உமர் பேசிய காணொளியொன்று தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் திகதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15பேர் பலியானார்கள் மேலும், பலர் காயம் அடைந்தனர்.
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு
இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று(17) அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
आतंकी उमर का सनसनीखेज वीडियो सामने आया
— Mohit (@Mohit_patrkar) November 18, 2025
जन्नत में जाने ओर हूर पाने की चक्र में डॉ बना आतंकवादी
यह पढ़ाई के कारण हुआ मदरसे की या जन्मजात ही यह लोग आतंकवादी है । #DelhiBlastCase #DelhiBlast #NIA #DelhiPolice #AlFalahUniversity #patlama #umarkhalid #mehmood pic.twitter.com/PKGYOUpUUM
இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
குறித்த காணொளியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளார்.