பல வருடங்களுக்கு பின்னர் சீனாவுக்கு பறக்கவுள்ள ஏர் இந்தியா..
அண்மைய ராஜதந்திர நடவடிக்கை மீளமைப்பின்கீழ், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2026 பெப்ரவரி முதல் புதுடெல்லிக்கும் சீனாவுக்கும் இடையில் விமானங்களை மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, அடுத்த ஆண்டு இறுதியில் மும்பை-சங்காய் வழித்தடத்தைத் தொடங்கவுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா- சீனா
சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பாதுகாப்பு குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள, ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஆரம்பத்தில் சீனாவுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, வளர்ச்சி பங்காளிகள் என்பதை மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்ஃ மேலும் உலகளாவிய கட்டண நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் அவர் விவாதித்தனர்.
இந்தநிலையில், கடந்த மாதம், இண்டிகோ விமான நிறுவனம், கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு விமானங்களை மீண்டும் ஆரம்பித்தது.