புத்தர் சிலை விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றம்.. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
சட்டவிரோத கட்டடம் ஒன்றை அகற்ற சென்ற சமயத்தில் புத்த பிக்குகள் மற்றும் பொது மக்கள் ஆக்ரோசமாக செயற்பட்ட நிலையில் பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
எச்சந்தர்ப்பத்திலும் தேரர்கள் மற்றும் பொது மக்களுக்கு தாக்குதல் நடத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடக அறிக்கையில்
திருகோணமலையில் சிலை அகற்றும் நடவடிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025.11.16 அன்று கரையோரம் பாதுகாப்பு திணைக்களம் திருகோணமலை துறைமுக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து,சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டுமானத்தை நிறுத்த சென்ற போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
மீண்டும் சிலை வைப்பு
இந்த சம்பவத்தை முன் கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுத்த முயற்சித்ததாலே புத்தர் சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர். இப்போது அந்த பகுதியில் சுமுக நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்கால நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புத்தர் சிலை மீண்டும் குறித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை இது தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.