பௌத்த மதத்துக்கு தனி இடம்! அரசாங்கத்திற்கு சஜித்தின் நினைவூட்டல்
அரசியலமைப்பு சட்டத்தில் பௌத்த மதத்துக்கு கொடுத்திருக்கும் முக்கியத்தும் தெரியாது என்றால்,அது தொடர்பிலுள்ள சட்டத்திட்டங்களை வாசிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(17) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதவாத தீ
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

புத்த மதத்தை பாதுகாப்பது மற்றும் போசிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமையாகும் 1951 ஆம் ஆரம்பிக்கப்பட்டதே இந்த திருகோணமலை சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையாகும். 2010 ஆம் ஆண்டு புத்தசாசன அமைச்சினால் பதிவு செய்யப்பட்டு மதஸ்தலங்களுக்கான காணி உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. இது தான் நாட்டின் நீதியாகும்.
அந்த விகாரைக்குள் பொலிஸார் சென்ற புத்தர் சிலையை வைக்கும் இடத்தை தீர்மானிக்கின்றனர். மேலும் புத்தமத கல்வி நிலையம் அமைக்கப்படும் விதம் தொடர்பில் கதைக்கின்றனர்.
அது தொடர்பில் தடை விதிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது. நாட்டில் மதவாத தீயை மூட்டி துடிக்கும் இனவாதிகள் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் கும்பல்களை போசனைப்படுத்தும் செயற்பாடாகவே இவை இருக்கிறது.
பொலிஸார் இடையூறு
மதஸ்தலத்துக்கான உறுதிப்பத்திரம் வைத்திருக்கும் ஒரு சமய நிறுவனத்திற்கு தங்களின் மதக் கடமைகளை செய்வதற்கான தகுதியும் நீதியின் சுதந்திரமும் இருக்கிறது.

ஏந்த பிரச்சினை குழப்பங்கள் இருந்தால் மகாசங்கத்தினரை அணுகி கலந்துரையாட்டி தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்த நடு நிசியில் தீடிரென பொலிஸார் புகுந்து விகாரையின் அபிவிருத்திக்கு மற்றும் மதக் கடைமைக்கு எவ்வாறு பொலிஸார் இடையூறு செய்ய முடியும்.இதற்கு யார் ஆணையிட்டது யார் என்று நான் கேட்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தில் பௌத்த மதத்துக்கு கொடுத்திருக்கும் முக்கியத்தும் தெரியாது என்றால்,அது தொடர்பிலுள்ள சட்டத்திட்டங்களை வாசிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை உடன் தீர்க்குமாறு நான் அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அத்தோடு ஜனாதிபதி மற்றும் உரிய தரப்பினர் மகாசங்கத்தினரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவும்.மதவாத்தை கொண்டு எரியபோகும் பாரிய தீயை கட்டுப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam