தேசிய மருத்துவமனைகளில் பணிப்பாளர் பதவி நியமனம் தாமதம்
இலங்கையின் மூன்று தேசிய மருத்துவமனைகளில் பணிப்பாளர் பதவிக்குப் பொருத்தமானவர்களை நியமிப்பதில் நிலவும் இழுத்தடிப்பு காரணமாக குறித்த பதவி நீண்ட நாட்களாக வெற்றிடங்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனை,கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை என்பவற்றிற்கான பணிப்பாளர் பதவிகளுக்கு இதுவரை பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவில்லை.
அதன் காரணமாக கடந்த எட்டுமாதங்கள் அளவில் குறித்த தேசிய மருத்துவமனைகள் பணிப்பாளர்கள் இன்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நிர்வாக நடவடிக்கை
தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் நிர்வாக நடவடிக்கைகளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்கவே கவனித்துக் கொள்கின்றார்.
இவ்வாறான பின்னணியில் தேசிய மருத்துவமனைகளின் செயற்பாடுகளில் அநாவசிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
