மன்னாரில் பொலிஸாரின் அடாவடி! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை
மன்னாரில் நேற்றைய தினம்(26) இரவு பொலிஸார் கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த பொதுமக்கள் மீது பல்வேறு விதமான பொய்யான வழக்குகளை தொடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை பொலிஸார் கொடூரமாக தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பொது மக்கள் அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸார் தங்கள் மீது உள்ள குற்றத்தை மறைக்கும் விதமாக பொதுமக்கள் மீது பல்வேறு விதமான பொய்யான வழக்குகளை தொடுத்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
குறிப்பாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் போராட்டத்தில் முன்னின்று செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்த்தில் அராஜகமாக மக்களை தாக்கியது மாத்திரம் இல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பெலிஸார் மேற்கொண்டுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் அமைதியான மக்கள் போராட்டத்தில் பெண்கள், மதகுருக்கள், பொதுமக்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை போராட்டகுழு முன்னெடுக்கவுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri