மொட்டுக் கட்சியின் வெற்றி பொது மக்களின் வெற்றியாகும்! நாமல் ராஜபக்ச
எதிர்காலத்தில் மொட்டுக் கட்சி இந்நாட்டில் பெறும் வெற்றியானது பொதுமக்கள் பெரும் வெற்றியாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை அரசியல் செய்யும் கட்சி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எங்களது கட்சி கொள்கை அரசியல் செய்யும் ஒரு கட்சியாகும். மக்கள் சார் கொள்கைகளே எங்கள் கட்சியின் அடிப்படையாகும். அந்த வகையில் எதிர்காலத்தில் நாங்கள் பெறும் வெற்றியானது பொதுமக்களின் வெற்றியாக மாறும்.
அவ்வாறுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அரசியல் செய்தார். எங்களைப் பொறுத்தவரை தனி நபர்களை விட கொள்கையே எங்களுக்கு பிரதானமானது.
அதன் காரணமாக கொள்கையின் அடிப்படையில் அதனை வெற்றிபெற வைப்பதற்காகவே நாங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
திஸ்ஸ குட்டி ஆரச்சியின் சர்ச்சைக்குரிய கருத்து
திஸ்ஸ குட்டி ஆரச்சி அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து ஊடகங்களில் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றது. ஆனால் அது ஒன்றும் பெரிய விடயமல்ல.
இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இருந்தபோதும் தாங்களும் ஜனாதிபதி என்ற நினைப்பில் முன்வரிசையில் சிலர் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர்.
திஸ்ஸ குட்டி ஆரச்சியின் கருத்தும் அவ்வாறானதே. இந்த அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் லால் காந்த போன்றவரே திஸ்ஸ குட்டி ஆரச்சியாகும். அவரது கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
