நள்ளிரவில் மன்னாரில் நடந்தது என்ன? பொலிஸார் - STF இன் கோரமுகம்! நேரடி ரிப்போர்ட்
மன்னாரில் நேற்றையதினம்(26) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பதற்றமான சுழ்நிலை நிலவியுள்ளது.
இந்தநிலையிலே, மக்கள் காற்றலைக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.ஆனால் நாம் காற்றலையை நிறுவுவோம் என தற்போதைய அநுர அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையினுடைய கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இந்த கூட்டத் தொடரிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ள நிலையில் மன்னாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரிலோ சர்வதேச முக்கிய நாடுகளின் கூட்டத் தொடரிலோ கலந்து கொள்ளும் எந்தவொரு அரசியல் தரப்பினரும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து அக்கறை காட்டுவதில்லை.அதற்கு சர்வதேசமும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.
இந்தநிலையிலே மன்னார் காற்றலையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி போராட்டத்திலே ஈடுபடுகின்றார்கள்.ஆனால் மக்களினுடைய கருத்துக்களை தற்போதைய அரசு செவிமடுப்பதாக இல்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
