நீதியரசர்களின் நியமனம் தொடர்பில் சட்டத்தரணிகள் அதிருப்தி
மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள நீதியசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் நீடித்து வரும் தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குள் தற்போது நிலவும் ஐந்து வெற்றிடங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நியமனங்களுக்கான அவசர அவசியத்தை வலியுறுத்தியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், நீதியை உறுதி செய்தல் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறையின் முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம்
அந்த வகையில் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டதாவது,
“நீண்ட காலத்திற்கு முக்கிய பதவிகள் வெற்றிடங்களாக இருக்கும் போது நீதித்துறை அமைப்பின் செயல்திறன் மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் தடைபடுகிறது.
அத்துடன் வழக்குகளின் தேக்கம் அதிகரித்து, நீதி வழங்குவதில் தாமதம், சட்ட அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கை குறைவு என்பவற்றுடன் இறுதியில் குடிமக்களுக்கு நீதி மறுக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.
அதேநேரம் இது பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமையும் என்பதுடன் உயர்நீதிமன்றங்களில் முழு அமர்வு இல்லாமையானது, விரிவான மற்றும் சீரான தீர்ப்புக்கான பன்முகத்தன்மையைக் குறைக்கின்றது” என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல் - அனதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |