அரசாங்கத்தின் வருமானத்தில் பற்றாக்குறை: அறிவிப்பை வெளியிட்ட திறைசேரி
இந்த ஆண்டுக்கான வருமானம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டவில்லை எனவும் அதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் திறைசேரி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நிதிச் சவால்கள் மற்றும் போதிய வருமானச் செயற்பாடுகளுக்கு மத்தியில் அரசாங்கம் இன்னமும் 'பல்வேறு காரணங்களுக்காக' போராடி வருகிறது.
எனவே மறு அறிவித்தல் வரை கடுமையான செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு திறைசேரியின் செயலர் கே.எம். மகிந்த சிறிவர்த்தன சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ளலாம்
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போது, செலவின முகமைகளின் துறைத் தலைவர்கள், அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய செயல்பாடுகளை மட்டுமே மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாரிய திட்டங்களின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுயாதீன கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |