ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நிகழ்வு தொடர்பில் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை விசேட அறிவித்தல்
சுவிஸ் மண்ணில் தங்களது கட்டமைப்புக்களை குறிவைத்து பல நாசகார வேலைத்திட்டங்கள் நடந்து வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை குறிப்பிட்டுள்ளது.
குறித்த நாசகார வேலைத்திட்டங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட கண்டன செய்தியிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்டன செய்தியில் மேலும்,
நாம் ஏற்கனேவே தெரியப்படுத்தியமை போல் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளைக்கும் மற்றும் சுவிஸ் தமிழர் ஒருகிணைப்புக் குழுவுக்கும் 02.08.2025 அன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.
நாசகார வேலைத்திட்டங்கள்
தற்பொழுது 02.08.2025 அன்று நடைபெறும் நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்துவதாக கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை சின்னத்தைப்பயன்படுத்தி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை ஆகிய எங்களுக்கும் இந்த அழைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
அது மட்டுமின்றி இந்த அழைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையில் இருந்து வெளியேற்றப்பட்ட எமது தேசியத்திற்கு எதிரானவர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம் என தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
