இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடலை மேற்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வரி விதிப்பானது ஓகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் கொள்வனவு செய்வதன் காரணமாக ட்ரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
