யாழ்.பல்கலையில் பயங்கரவாதி நாவல் அறிமுகம்
ஈழத்து எழுத்தாளரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று (10.01.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
நாவல் விமர்சனம்
குறித்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி சி. ரகுராமும், சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம் கலந்து கொண்டுள்ளனர்.
நாவலுக்கான விமர்சனத்தை சைவ சித்தாந்த்தத் துறையை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வ மனோகரன் வழங்கி வைத்தார்.
'பயங்கரவாதி்' நாவலின் முதற் பிரதியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி எஸ்.ரகுராம் வெளியிட்டு வைக்க, அதனை மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் பெற்றுக் கொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ அமைப்பினர்கள்,
ஊடகத்துறையினர் கல்விச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
