இலங்கையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய முறைமை
வீதிப் போக்குவரத்து குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புள்ளிகள் குறைத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் இந்த புதிய முறைமை கொண்டு வரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த அல்ல : பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி
வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரையில் நேற்று (02.12.2023) பிற்பகல் வழிபாட்டில் ஈடுபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தல்
அவர் மேலும் கூறுகையில், அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதுதான்.
எனவே விரைவில் தகுதியின்மையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புள்ளிகளை குறைத்தல் மற்றும் செய்து ரத்து செய்யும் முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |