மதுபான விற்பனையில் வீழ்ச்சி-மதுவரி திணைக்களம்
இலங்கையில் மதுபான விற்பனை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைந்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான தேசிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் விற்பனையானது கடந்த சில மாதங்களில் பெரியளவில் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கசிப்பு போன்ற சட்டவிரோத மதுபான விற்பனைகள் அதிகரிக்கலாம்
மக்கள் கடும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருவது இதற்கான பிரதான காரணம். இந்த நிலைமை காரணமாக கசிப்பு போன்ற சட்டவிரோத மதுபான விற்பனைகள் அதிகரிக்கக் கூடும்.
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு தேடுதல்
இப்படியான சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக மதுவரி திணைக்களம் அதிகளவில் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தி நாடு முழுவதும் மேற்கொள்ளும் சுற்றிவளைப்பு தேடுதல்களை அதிகரித்துள்ளது.
மதுபான விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்கும் மது வரி வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.