கோப்பாயில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் பொலிஸாரினால் கைது
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 340 லீற்றர் (2 பரல்) கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்
பரிசோதகர் பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர்
பிரதீப் தலைமையிலான அணியினரால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri