சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி! வெளியான ஆய்வு முடிவு
கோவிட் தொற்று காரணமாக பல தசாப்தங்களுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்திலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2020-ல் பிறந்த ஆண்களுக்கு 9 மாதங்கள் (0.9 வருடங்கள்) குறைந்து 81.0 வருடங்களாகவும், பெண்களுக்கு 5 மாதங்கள் (0.5 வருடங்கள்) குறைந்து முதல் 85.1 வருடங்களாகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான வீழ்ச்சி இறுதியாக ஆண்களுக்கு 1944 ஆண்டும், பெண்களுக்கு 1962 ஆண்டும் ஏற்பட்டுள்ளதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,ஆண்களின் ஆயுட்காலம் 7 மாதங்களாகவும், பெண்களின் ஆயுட்காலம் 5 மாதங்களாகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.