யாழ். வண்ணார் பண்ணை பகுதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் (Photos)
யாழ்பாணம் - வண்ணார் பண்ணை பகுதியில் சிசுவின் சிதைவடைந்த சடலத்தின் உடற்பாகம் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (10.08.2023) மாலை அயலவர்களால் குறித்த உடற்பாகம் அடையாளம் காணப்பட்டு இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து ஆராய்ந்தார்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன் மணல் சுடலைப் பகுதியில் இருந்து விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
