வவுனியாவில் 10 ஆயிரம் ஏக்கராக குறைவடைந்த பெரும்போக நெற்செய்கை
வவுனியா மாவட்டத்தில் இந்தமுறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல அபிவிருத்தி பிரிவுகளினூடாகவும் 10 ஆயிரத்து 51 ஏக்கர் காணிகளில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றில் மிககுறைவாக உலுக்குளம் பிரிவில் 30 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக ஓமந்தை பிரிவில் 2489 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெற்செய்கை
இந்தமுறை பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி பிந்தியமையினால் இந்தநிலமை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இனிவரும் நாட்களில் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப 25 ஆயிரத்து 216 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
