பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்: மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு- செய்திகளின் தொகுப்பு
பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிட்டத்தட்ட 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்குமிடமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜூன் நடுப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 937 பேர் இறந்துள்ளனர். இதில் 343 குழந்தைகள் உள்ளனர்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இது 2010ஆம் ஆண்டு பேரழிவுகரமான வெள்ளத்தின் நினைவை மீண்டும் கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுசிஸ்தான் மற்றும் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு மாகாணங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டா நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
