பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்
வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொதுத்தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெற்றால் இரண்டுக்கும் கட்சி தயாராகவே உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

நாட்டில் பலம் வாய்ந்த கட்சி
மேலும், இன்று இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன திகழ்வதாகவும், பசில் ராஜபக்சவின் திட்டங்களுடனேயே கட்சியின் வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவின் செயற்பாடு மற்றும் கட்சிக்கு இணையான ஒரு அரசியல் கட்சி தலைவர் இருப்பார் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri