அனைத்து வாகனங்களும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!
புதிய இணைப்பு
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களும் நாளை (1) மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்
இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாளைய எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் இன்று(31.3.2026) தீர்மானம் எட்டப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய QR முறைமை குறித்து பொதுமக்களுக்கான வழிகாட்டல்களை இறுதி செய்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
விநியோகத்தைப் பொறுத்தவரை, 32,000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு வரவுள்ளது.
எரிவாயு கையிருப்பு
இலங்கைக்கு சொந்தமான 42,000 மெற்றிக் தொன் எரிவாயு கையிருப்பு தற்போது மாலைதீவில் உள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட தவிசாளர் சன்ன குணவர்தன, இந்த கையிருப்பை உடனடியாக தீவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மே மாதத்திற்கான மேலதிக 33,000 மெற்றிக் தொன் இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று ஏப்ரல் 25 ஆம் திகதி வரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7,000 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தை அடையவுள்ளதாக லஃப்ஸ் எரிவாயுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளிந்த குருகுலசூரிய தெரிவித்தார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam