அரிசி இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி,சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து, ஒரு இறக்குமதியாளர் 1,040 மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு
இதேவேளை, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுகிறது.

மின்சார கட்டணம் அதிகரிப்பினால் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri